மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 6:55PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் வழிகாட்டுதலின் கீழ், 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை நடத்தப்பட்ட தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ல் தனது பங்களிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
சுமார் ஒரு மாத காலத்தில் இந்தத் துறை, 40 தூய்மைப் பிரச்சாரங்களை நடத்தும் தனது இலக்கை அடைந்தது. குறைகளைத் தீர்ப்பதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தின் போது, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 100 குறைகளும், அவை தொடர்பான 30 மேல்முறையீடுகளும் முழுமையாகத் தீர்த்து வைக்கப்பட்டன. மொத்தம் 800 இயல் ஆவணக் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் 745 கோப்புகள் அகற்றப்பட்டன. இதேபோல ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 45 மின்னணுக் கோப்புகளில், 25 கோப்புகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. தேவையற்ற பொருட்களை அகற்றியதன் மூலம், சுமார் 1,150 சதுர அடி அலுவலக இடம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333254®=3&lang=1
****
SK/BR/SH