இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 4:50PM by PIB Chennai
உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் 2026 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் மகப்பேறு சிகிச்சை, பிரசவத்தின்போது 24 பெண்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தியைத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்துள்ளது. காஸியாபாத் மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் அதிக பிரசவ ஆபத்துகள் கொண்ட கர்ப்பிணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது கடுமையான மனித உரிமை மீறலாகும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரப் பிரதேச மருத்துவ சுகாதாரம், குடும்ப நலத் துறையின் முதன்மைச் செயலர், காஸியாபாத் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிக ரத்தப்போக்கு, கடுமையான தொற்று, உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளிட்ட காரணங்களால் இந்த உயிரிழப்புகள் நேரிட்டதாக ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333127®=3&lang=1
****
SK/PD/SH