சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 2:06PM by PIB Chennai
மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெ.பி.நட்டா, ஜம்மு கஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் கட்டப்பட்டுவரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவமனையின் உள்கட்டமைப்பு, கொள்முதல் செய்ய வேண்டிய மருத்துவ உபகரணங்கள், மருத்துவ பணியாளர்களின் தேர்வு உள்ளிட்டவை குறித்தும் இந்த ஆய்வின்போது, மத்திய அமைச்சர் திரு ஜெ.பி.நட்டா, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், அவந்திபோராவில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் பெருமளவு முடிந்துவிட்டதாக குறிப்பிட்டார். மத்திய பொதுப்பணித்துறையினர், முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய பணிகளால், கடினமான நிலப்பரப்பிலும் கட்டுமான பணிகள் சாத்தியமானதாகவும் கூறினார். வெளிநோயாளிகள் பிரிவு, குடியிருப்புகள், விடுதிக் கட்டடப் பணிகள் முடிவடைந்தாக குறிப்பிட்ட அமைச்சர் திரு ஜெ.பி.நட்டா, வகுப்பறைகள், நிர்வாக கட்டிடம், மருத்துவமனை ஆகியவற்றின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
59.41 கோடி ரூபாய் மதிப்பில், 180 மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், வெளிநோயாளிகள் பிரிவுக்கான மருத்துவ உபகரணங்கள், ஆய்வகங்களுக்கான தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அவந்திபோரா எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவுக்கான கட்டமைப்பு பணிகளை 2026 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், உள்நோயாளிகள் பிரிவு 2027 ஜூலை மாதம் செயல்படும் வகையில், திட்டமிட்டு பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். இங்கு இளநிலை மருத்துவப் படிப்புக்கான வகுப்புகள் 2027 ஜூன் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் திரு ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332985®=3&lang=1
***
AD/LN/RJ