அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பாரம்பரிய அறிவைப் பரப்புதல் தொடர்பான சர்வதேச மாநாடு புதுதில்லியில் நிறைவு: பாரம்பரிய அறிவுக்கான இந்திய ஆய்விதழின் 25-வது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 9:57PM by PIB Chennai
புதுதில்லியில் மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் (சிஎஸ்ஐஆர்) தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய அறிவைப் பரப்புதல் தொடர்பான இரண்டு நாள் சர்வதேச மாநாடு நிறைவடைந்தது. இதன் நிறைவு நாளில் பாரம்பரிய அறிவுக்கான இந்திய ஆய்விதழின் 25-வது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழை அந்நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கீதா வாணி ராயசம் வெளியிட்டார்.
பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பதிலும், அதனை நவீன அறிவியல் சான்றுகளுடன் ஆவணப்படுத்துவதிலும் இந்த ஆய்விதழ் ஆற்றியுள்ள பணிகள் குறித்துப் பல்வேறு ஆய்வாளர்கள் உரையாற்றினர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற விதை சேகரிப்பாளர் திருமதி ரஹிபாய் சோமா போபரே சிறப்புரையாற்றி, பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் நஞ்சில்லா இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332312®=3&lang=1
***
AD/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2333103)
வருகையாளர் எண்ணிக்கை : 6