சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு உயர்கல்வியில் சாதனை படைத்த இளைஞர்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 3:23PM by PIB Chennai

36 வயதான ரமேஷ் குமார் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் உயர்கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவர். இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக உயர்கல்வி பயில பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். பேராசிரியராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த ரமேஷ் குமார், மத்திய சமூகநீதி, அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, 2017- 2022-ம் ஆண்டு காலகட்டத்தில், அவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கல்வி உதவித்தொகையாக சுமார் 12 லட்சம் ரூபாய் அவருக்கு வழங்கப்பட்ட நிலையில், நிதிச்சுமையில் இருந்து விடுபட்டு முனைவர் பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். ஏற்கனவே, எம்.ஏ., பி.எட் முடித்திருந்த இவருக்கு இந்த கல்வி உதவித்தொகையின் மூலம் பேராசிரியர் கனவு நனவானது. கல்வி உதவித்தொகையானது, ரமேஷ் குமாருக்கு பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடவும், உயர்கல்வியை முடிக்கவும் மிகவும் உதவிகரமாக இருந்தது. ரமேஷ் குமார் தற்போது  அரசு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கல்விச் சாதனையும், அதன்மூலம் கிடைத்த அரசுப் பணியும் ராஜேஷ்குமாரின் வருமானம், தொழில்முறை சூழலை மேம்படுத்துவதற்கான பங்களிப்பை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332471&reg=3&lang=1&_gl=1

***

AD/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333097) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Nepali , हिन्दी , Assamese