சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீதித்துறை சார்பாக 'மின்னணுத் தாக்கல் 3.0: நடைமுறையிலிருந்து செயல்பாடு' என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 7:36PM by PIB Chennai

மத்திய சட்டம், நீதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீதித் துறை, புதுதில்லியில் இன்று ‘மின்னணுத் தாக்கல் 3.0: நடைமுறையிலிருந்து செயல்பாடு’ என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கை ஏற்பாடு செய்தது. மின்னணு நீதிமன்றங்கள் பணித் திட்டத்தின்  ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்தப் பயிலரங்கில், இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் அதிகாரிகள், பிரதிநிதிகள், உச்ச நீதிமன்றத்தின் மின்னணுக் குழுவின் உறுப்பினர் (அமைப்புமுறைகள்), தேசிய தகவல் மையத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டார். புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் தொடக்கத்தில் தயக்கம் இருப்பது இயல்புதான் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், மின்னணுத் தாக்கல்  என்பது இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகும் என்றும், இது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை இன்னும் பரவலாகப் பயன்படுத்துவது, நிலுவையில் உள்ள வழக்குகளின் சவாலை எதிர்கொள்ளவும், வழக்குகளை விரைந்து முடிப்பதற்கும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவால் மனிதர்களுக்கு மாற்றாகச் செயல்பட முடியாது என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தினார். மனித உழைப்பைக் குறைப்பதற்கும், பணிகளை எளிதாக்குவதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும் உதவும் ஒரு கருவியாகவே தொழில்நுட்பத்தைப் பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332743&reg=3&lang=1

****

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2332812) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English