சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அர்மீனியாவில் நடைபெற்ற உயிரி பன்முகத்தன்மை மாநாட்டில், இந்தியாவின் வலுவான பகுதி சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டார் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 7:15PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், ஆர்மீனியாவின் யெரெவானில் 2026 நவம்பர் 3 அன்று நடைபெற்ற உயிரி பன்முகத்தன்மை குறித்த மாநாட்டினிடையே, இந்தியாவின் வலுவான பகுதி சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை வரையறுப்பதற்கான வழிகாட்டுதல்கள்  2026-ஐ வெளியிட்டார். "கொள்கையிலிருந்து செயல்முறை: இந்தியாவின் பல்லுயிர் பாதுகாப்பு உறுதிப்பாடுகளை முன்னெடுத்தல்” என்ற தலைப்பிலான இந்த நிகழ்வை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், தேசிய பல்லுயிர் ஆணையம், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “வலுவான பகுதி சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பவை,  பாதுகாக்கப்பட்ட பகுதிகள், காடுகளுக்கு வெளியே உள்ள நிலப்பரப்புகளைச் சிறப்பாக நிர்வகிப்பதன் மூலம், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் ஒரு புதிய அணுகுமுறையாகும்” என்று தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332733&reg=3&lang=1

****

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2332804) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English