புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 4:00PM by PIB Chennai
மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம், ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை (அதாவது 2024-25 நிதியாண்டு) தொழில்துறைக்கான வருடாந்திர ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
2026 செப்டம்பர் 30 அன்று தகவல் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல் தொகுப்பு, தொழில்துறைக்கான வருடாந்திர ஆய்வு முடிவு 2024-25-ம் ஆண்டிற்கான தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சில சிறப்பு அட்டவணைகள் அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://www.mospi.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தொழில்துறைக்கான வருடாந்திர ஆய்வு, பல்வேறு உற்பத்தித் தொழில்களின் கட்டமைப்பு, வளர்ச்சி, மாற்றங்கள் குறித்த விரிவான புரிதலை வழங்கும் நோக்கத்துடன் இந்த ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இது உற்பத்தி வெளியீடு, மதிப்பு கூட்டப்பட்ட தொகை, வேலைவாய்ப்பு, மூலதன உருவாக்கம், உள்ளிட்ட பிற முக்கிய அளவீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகவல்களை வழங்குகிறது. இது தேசிய, மாநில அளவிலான தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கு மதிப்புமிக்கத் தரவுகளை வழங்குகிறது. இதன் முடிவுகள் மாநில அளவிலும், முக்கிய தொழில்துறை அளவிலும் தயாரிக்கப்படுகின்றன.
இதன்படி, உற்பத்தித் துறை சார்ந்த பெருநிறுவனங்கள், 9.28% மதிப்பு கூட்டப்பட்ட மொத்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
பதிவுசெய்யப்பட்ட உற்பத்தித் துறையில், ஆலை, இயந்திரங்களின் மொத்த மதிப்பு, முந்தைய ஆண்டைக் காட்டிலும், 2024-25-ல், 7.25% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதே காலகட்டத்தில், மொத்த மதிப்பு கூட்டப்பட்ட மொத்த வளர்ச்சியில், 89%-க்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ள உற்பத்தித் துறை சார்ந்த பெருநிறுவனங்கள், செயல்பாட்டில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் 3.45% வளர்ச்சியையும், பணியில் ஈடுபட்டுள்ள நபர்களின் எண்ணிக்கையில் 7.57% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.
உணவுப் பொருட்கள், ஜவுளி, அடிப்படை உலோகங்கள், மோட்டார் வாகனங்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு ஆகிய முதல் ஐந்து தொழில்துறைகள் இணைந்து, 2024-25-ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 41%-க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332475®=3&lang=1&_gl=1
(Release ID: 2332475)
****
SK/SV/SH