சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை, ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் வசிக்கும் பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கான ஆயுள் சான்றிதழ் இயக்கம் நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 7:20PM by PIB Chennai

சென்னை, ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் வசிக்கும் பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கான ஆயுள் சான்றிதழ் இயக்கம் சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள  தமிழ்நாடு வட்ட  அலுவலகத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதேபோல், சேலம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நவம்பர் 20-ம் தேதியும், ஈரோடு பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நவம்பர் 13-ம் தேதியும் மதுரை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நவம்பர் 19-ம் தேதியும் நடைபெறவுள்ளது. திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகங்களில் நவம்பர் 13-ம் தேதி  நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சி நவம்பர் 20-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இம்மாவட்டங்களில் வசிக்கும் ஓய்வூதியதாரர்கள் இம்முகாமில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

***

AD/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2332739) வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க: English