மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, 'துய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0'-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 7:37PM by PIB Chennai

கடந்த அக்டோபர் 2 முதல் 31 வரை நடத்தப்பட்ட துய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ல் மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, தீவிரமாகப் பங்கேற்றது. அரசு அலுவலகங்களில் தூய்மையை ஒரு நடைமுறையாக நிலைநிறுத்துவதையும், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் ஒரு மாத காலம் நடைபெற்ற இந்த இயக்கத்தின்போது, நிர்ணயிக்கப்பட்ட 189 என்ற எண்ணிக்கைக்கு எதிராக 250 குறைகள் தீர்த்து வைக்கப்பட்டன. 16,707 இயல் கோப்புக்கள் ஆய்வு செய்யப்பட்டு, 10,710 கோப்புக்கள் நீக்கப்பட்டன. மேலும், ஆய்வு செய்யப்பட்ட 2,171  மின்னணு கோப்புக்களில், 1,327 கோப்புகள் முடித்துவைக்கப்பட்டன. பயன்படுத்தப்படாத பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.25,93,896  வருவாய் ஈட்டப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332247&reg=48&lang=2

***

SK/BR/PS


(வெளியீட்டு அடையாள எண்: 2332465) வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी