சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் உள்ள தில்லி ஹாட்டில் கைவினைஞர்கள் கண்காட்சியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2026 8:04PM by PIB Chennai

தில்லியில் உள்ள ஐஎன்ஏ தில்லி ஹாட்டில், கைவினைஞர்கள் கண்காட்சியை, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் இன்று மாலை தொடங்கி வைத்தார்.

15 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி, நவம்பர் 15, 2026 வரை பொதுமக்களின் பார்வைக்காக தில்லி ஹாட்டில் திறந்திருக்கும்.

மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி, பட்டியல் சாதியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், துப்புரவுப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த கைவினைஞர்கள்,  பயனாளிகளுக்கு, தங்கள் தயாரிப்புகளைப் பரந்த அளவிலான மக்களிடம் காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஒரு பிரத்யேக சந்தைக்கான  தளத்தை வழங்குகிறது.

கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட அமைச்சர், அங்கிருந்த பொறுப்பாளர்கள், பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.

 

இந்த விழாவில், தேசிய பட்டியல் சாதியினர் நிதி, மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர் திரு பிரபாத் தியாகி, தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர்,  நிர்வாக இயக்குநர் திரு அசுதோஷ் ஜெயின், அந்த அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி மோனாலி பி. தகதே, மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின்  துணை இயக்குநர் ஜெனரல் திருமதி ரிச்சா சங்கர், அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331776&reg=3&lang=1

(Release ID: 2331776)

 

 

***

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2331843) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English