இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 3:51PM by PIB Chennai
அஞ்சல் சேவை தொடர்பான குறைதீர்ப்பு முகாம், 2026 நவம்பர் 6-ம் தேதி அன்று காலை 11.30 மணிக்கு, சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள தலைமை அஞ்சலக அதிகாரி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தினால் வழங்கப்படும் அஞ்சலக சேவைகள் குறித்த குறைகள், ஆலோசனைகள் இருப்பின், அவைகள் குறித்து, நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கலாம்.
திருமதி சி ஸ்வாதி மதிரிமா, தலைமை அஞ்சலக அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னை-600001 என்ற முகவரிக்கு 2026 நவம்பர் 4-ம் தேதிக்குள் குறைகளை அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
SS/LN/GS