இடுகை இடப்பட்ட நாள்:
01 NOV 2026 6:43PM by PIB Chennai
இன்று முதல் (01 நவம்பர் 2026), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) தனது மேற்பார்வை கட்டமைப்பை, பிராந்திய அடிப்படையிலான கட்டளை மாதிரியிலிருந்து, மிகவும் சிறப்பு வாய்ந்த, துறை சார்ந்த செயல்பாட்டு மாதிரிக்கு மாற்றியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த முக்கிய மறுசீரமைப்பு, தேசியப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், படையின் தயார்நிலையை அதிகரிப்பதையும், முக்கிய உள்கட்டமைப்புகளை மேலும் திறன் வாய்ந்த முறையில் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு உத்திசார் மாற்றமாகும்.
P2_20261101185821_968097.jpeg)
இந்த மாற்றத்தின் முதன்மை நோக்கம், படைப்பிரிவுகளுக்கு ஆதரவளிக்கும் மேற்பார்வை கட்டமைப்பை, குறிப்பிட்ட துறைகளில் ஆழ்ந்த நிபுணத்துவம் கொண்டதாகவும், தெளிவான நோக்கத்துடன் செயல்படக்கூடியதாகவும், விரைவாக எதிர்வினையாற்றக்கூடியதாகவும் மாற்றுவதாகும். மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதல், துல்லியமான முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் ஆதரவுடன், களப்பணியில் உள்ள பிரிவுகளின் செயல்பாடுகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, இன்னும் கூடுதல் செயல்திறனுடன் மாற்றப்படும்.
முந்தைய பிராந்திய நடைமுறையில், ஒரு குறிப்பிட்ட துறை தலைமையகம், நிலக்கரிச் சுரங்கங்கள் முதல் மின் உற்பத்தி நிலையங்கள், துறைமுகங்கள் வரை, பல்வேறு அமைச்சகங்களின் கீழ் வரும் 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு பிரிவுகளை நிர்வகித்து வந்தது.
P4_20261101185852_efa4d5.jpeg)
இன்றிலிருந்து, மேற்பார்வை என்பது அந்தந்த வகையின் அடிப்படையில் பிரத்யேகமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. புதிதாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ள கட்டளை அமைப்புகள் பின்வருமாறு:
* எரிசக்தி-I (புது தில்லி)
* எரிசக்தி-II (கொல்கத்தா)
* நிலக்கரித் துறை (ராஞ்சி)
* எஃகுத் துறை (பிலாய்)
* பெட்ரோலியம் இயற்கை எரிவாயுத் துறை (குவஹாத்தி)
* மேற்கு கடற்கரை துறைமுகம் (மும்பை)
* கிழக்கு கடற்கரை துறைமுகம் (சென்னை)
* அரசு கட்டடங்கள், அருங்காட்சியகங்கள், நினைவுச்சின்னங்கள், பொது விரைவு போக்குவரத்து அமைப்புகள் துறை (புது தில்லி)
P6_20261101185938_22eb72.jpeg)
இவை ஏற்கனவே வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் விமானப் போக்குவரத்துத் துறை, அணுசக்தி, விண்வெளித் துறை ஆகியவற்றுடன் இணைந்து, ஒட்டுமொத்த படையையும் ஒரு ஒருங்கிணைந்த, நிரூபிக்கப்பட்ட செயல்பாட்டு மாதிரியின் கீழ் கொண்டு வருகின்றன.
இந்த மறுசீரமைப்பு, முக்கியத் தளத்தை மையமாகக் கொண்ட பாதுகாப்பு மாதிரியிலிருந்து, உளவுத்துறை தலைமையிலான, இடர் அடிப்படையிலான முக்கிய உள்கட்டமைப்புப் பாதுகாப்பு அணுகுமுறைக்கான மாற்றத்தைக் குறிக்கிறது. இது, பாதுகாப்பு அமைப்பில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை முறையாக இணைப்பதற்கு நேரடியாக ஆதரவளிக்கும்.
P8_20261101190027_e8ce88.jpeg)
நாட்டின் முக்கிய அமைப்புகள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் செயல்படுவதை உறுதி செய்வதற்கு சிஐஎஸ்எஃப் இப்போது கட்டமைப்பு ரீதியாக வலுவூட்டப்பட்டுள்ளது.
***
TV/PLM/PD