சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கைவினைப்பொருள் கண்காட்சி புதுதில்லியில் நாளை தொடங்குகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2026 5:41PM by PIB Chennai

கைவினைப்பொருள் கண்காட்சி, புது தில்லியில் நாளை தொடங்குகிறது.

திங்கள்கிழமை அன்று கைவினைப்பொருள் கண்காட்சியை, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைக்கிறார்.

 தேசியத் தலைநகரில் உள்ள ஐஎன்ஏ தில்லி ஹாட்டில், நாளை முதல் நவம்பர் 15-ம் தேதி வரை, 15 நாட்களுக்கு இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியை மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் திருமதி வி வித்யாவதி, தேசிய பட்டியலினத்தவருக்கான நிதி, மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பிரபாத் தியாகி, தேசிய  மாற்றுத்திறனாளி நிதி, மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு அசுதோஷ் ஜெயின் உள்ளிட்ட அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

 

பல்வேறு சமூகக் குழுக்கள், மக்கள் தங்களின் படைப்பாற்றல், திறமை,  பாரம்பரிய கைவினைத் திறன்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு தளத்தை வழங்குவதுடன், அவர்களின் தயாரிப்புகளை ஏராளமான வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வாய்ப்புகளை உருவாக்குவதையும் இந்த கண்காட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். 2022-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும், இந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சி மூலம், 1,000-க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330929®=3&lang=1

(Release ID: 2330929)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2331000) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी