இடுகை இடப்பட்ட நாள்:
30 OCT 2026 7:33PM by PIB Chennai
தபால் துறையும், இந்திய அஞ்சலக வங்கியும் இணைந்து, ஜீவன் பிரமாண் எனப்படும் ஓய்வூதியத்திற்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை இணையதளம் வழியாக வீடுகளுக்கே வந்து வழங்கும் வசதியை வழங்குகின்றன. எனவே ஓய்வூதியதாரர்கள் இனி அலுவலகங்களுக்கு அடிக்கடி செல்லாமல் தங்களின் வருடாந்திர ஆயுள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கலாம்.
தகுதியுள்ள மத்திய அரசு, மாநில அரசு, பாதுகாப்புத் துறை, ஊழியர் சேமநிதி அமைப்பு, பிஎஸ்என்எல், சென்னை துறைமுக அறக்கட்டளை, தமிழ்நாடு மின் வாரியம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சென்னை மாநகராட்சி உள்ளிட்டவற்றின் ஓய்வூதியதாரர்களுக்கும் பிற ஓய்வூதியதாரர்களுக்கும் இந்தச் சேவை கிடைக்கிறது. பயோமெட்ரிக் அங்கீகாரம் அல்லது ஃபேஸ் ஆர்டி செயலியைப் பயன்படுத்தி, ஓய்வூதியதாரர்கள் உள்ளூர் தபால்காரர்கள் அல்லது தபால் விநியோகப் பணியாளர்களின் உதவியுடன் வீட்டிலிருந்தே இந்தச் செயல்முறையை முடிக்கலாம். இந்தச் சேவை ஒரு சிறிய கட்டணத்தில் வழங்கப்பட்டாலும், இபிஎஃப்ஓ, பிஎஸ்என்எல், பாதுகாப்புத் துறை ஓய்வூதியதாரர்களுக்கு இது முற்றிலும் இலவசம்.
தடையற்ற ஓய்வூதிய விநியோகத்தை உறுதி செய்வதற்காக, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் தனது 11,800-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள், 17,000 அஞ்சல் விநியோகப் பணியாளர்கள், கிராம அஞ்சல் பணியாளர்களைக் கொண்ட விரிவான கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது. கடந்த ஆண்டு, இந்த வட்டம் 1,55,355 டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை வெற்றிகரமாக வழங்கியது. வீடுகளிலேயே வழங்கப்படும் இந்த சேவையைப் பெற, ஓய்வூதியதாரர்கள் தங்களது கைபேசி எண், ஓய்வூதியப் பண ஆணை (PPO) எண, ஓய்வூதியக் கணக்கு விவரங்களை அடையாளச் சரிபார்ப்புடன் தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தபால்காரர் டிஜிட்டல் அங்கீகாரத்திற்கு உதவுவார். ஓய்வூதியதாரர்கள் 155299 என்ற கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் இந்தச் சேவையை முன்பதிவு செய்யலாம்.
தகுதியுள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தபால் துறை கேட்டுக்கொள்கிறது.
****
SK/PLM/SH