தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 7:16PM by PIB Chennai
நாடு முழுவதும் முதலீட்டாளர்களைச் சென்றடைவதை விரிவுபடுத்தவும், பரஸ்பர நிதி சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தவும் இந்திய அஞ்சல் துறையும் யுடிஐ பரஸ்பர நிதி நிறுவனமும் தங்களின் நீண்டகால கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளன. தற்போதுள்ள ஒப்பந்தத்தை நீட்டிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இன்று மும்பையில் அஞ்சல் துறையின் பார்சல் மற்றும் சிசிஎஸ் இயக்குநரகத்தின் தலைமைப் பொது மேலாளர் திரு அத்னான் அகமது, யுடிஐ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு வெற்றி சுப்ரமணியம் ஆகியோரர் கையெழுத்திட்டனர்.
இந்தக் கூட்டாண்மை, நாடு முழுவதும் நிதிச் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதில் இரு தரப்பின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. நாடு தழுவிய வாடிக்கையாளர் அடையாளச் சரிபார்ப்புத் திட்டத்தின் கீழ், தொலைதூர மற்றும் போதிய சேவைகள் கிடைக்காத பகுதிகள் உட்பட, முதலீட்டாளர்களின் இல்லங்களுக்கே சென்று கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ள இந்திய அஞ்சல் துறை தனது விரிவான அஞ்சல் வலையமைப்பு, கடைசி மைல் இணைப்புத் திறனைப் பயன்படுத்தவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330193®=3&lang=1
***
SK/BR/PS