அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தொழில்நுட்பத்தின் வாயிலாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: இஎஸ்டிஐசி 2026 நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 7:13PM by PIB Chennai

பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற “வளர்ந்து வரும் அறிவியல், தொழிநுட்பம், புத்தாக்கம் மாநாடு” (இஎஸ்டிஐசி) 2026-ன் நிறைவு அமர்வில் உரையாற்றிய, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல்துறை  இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளின் இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த அழைப்பு விடுத்தார். மேலும், 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை அடையும் இலக்கை அடைவதற்காக, அளவிடக்கூடிய முடிவுகளை நோக்கிய பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிவுறுத்தலையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

 

அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தாண்டி, அவற்றை நடைமுறைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கச் சூழலியலின் வெற்றியை, தேச மேம்பாட்டிற்கும், வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கும், அது அளிக்கும் உறுதியான பங்களிப்புகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும் என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'முடிவுகளை மையமாகக் கொண்ட அறிவியல், தொழில்நுட்பம்' என்ற தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் முன்னேற்றத்தை மதிப்பிடவும், நீண்டகால அறிவியல், தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்தவும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தெளிவான, அளவிடக்கூடிய இலக்குகளை நிர்ணயிப்பதன் முக்கியத்துவத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330191&reg=3&lang=1

****

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330272) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी