தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 4:28PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), செப்டம்பர் 2026 மாதத்தில், காந்திதாம், புஜ் நகரங்கள், புஜ் முதல் பச்சாவ் வரையிலான நெடுஞ்சாலை (குஜராத் உள்ளூர் சேவைப் பகுதி) உள்ளிட்ட கட்ச் பகுதி முழுவதும் நடத்தப்பட்ட வெளிப்படையானச் சோதனையின் முடிவுகளை, தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் தகவலுக்காக வெளியிட்டுள்ளது.
தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் வழங்கப்படும் மொபைல் சேவைகளின் (குரல் மற்றும் தரவு ஆகிய இரண்டும்) நிகழ்நேரத் தரத்தை மதிப்பீடு செய்து சரிபார்ப்பதே இந்தச் சோதனையின் நோக்கமாகும்.
இந்த சோதனையின்போது, தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் செயல்திறன், அழைப்புத் துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பு வெற்றி விகிதம், பேக்கெட் இழப்பு விகிதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்றம், செயல்திறன் போன்ற முக்கிய சேவைகள் சார்ந்த தரநிலை அளவுருக்களுக்காகப் பதிவு செய்கிறது. பின்னர் இந்தத் தரவுகள், நுகர்வோருக்குத் தெரிவிக்கவும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும் வெளியிடப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330060®=48&lang=1
(Release ID: 2330060)
****
SK/SV/SH