திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய கல்வி உதவித்தொகை மூலம் முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 5:48PM by PIB Chennai

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியை சேர்ந்தவர் அமித் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய இவர், உயர்கல்வியில் சாதிக்க வேண்டும் என விரும்பினார். இந்நிலையில், உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை கேட்டு, பட்டியலின மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை திட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு ஆராய்ச்சி படிப்பு, பராமரிப்பு போன்ற தேவைகளுக்காக ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகையின் மூலம், தனது முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார் அமித் குமார். மத்திய அரசின் உதவித்தொகை மூலம் அமித் குமாரின் கனவு நனவாகியுள்ளது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய அமித் குமார் போன்ற பல மாணவர்களின் உயர்கல்வி கனவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.      

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330124&reg=3&lang=1&_gl=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330215) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी