இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 6:23PM by PIB Chennai
மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகம், அதன் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளுடன் இணைந்து, நாடு தழுவிய தூய்மையே சேவை - 2026 இயக்கத்தில் முனைப்புடன் பங்கேற்றது.
குடிநீர், சுகாதாரத் துறை, வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால், 2026 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை இந்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.
தூய்மையில் பங்களிப்பு, தூய்மையான இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இந்த ஆண்டிற்கான கருப்பொருளுடன், தூய்மை, நிலைத்தன்மை, விழிப்புணர்வை மேம்படுத்துவதில் ஒருங்கிணைந்த பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளுடன் இணைந்து, தூய்மையான, நிலையான, வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்குவதற்கான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329681®=3&lang=1
***
SK/SV/PS