தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க மாநாடு 2026: நுண்ணறிவு வலையமைப்புகள், குவாண்டம் தகவல் தொடர்பு குறித்த அமர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 7:46PM by PIB Chennai

புதுதில்லியில் 2026 அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறும் ‘வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க மாநாடு 2026’ நிகழ்வில், அக்டோபர் 28 அன்று ‘நுண்ணறிவு வலையமைப்புகள் மற்றும் குவாண்டம் தகவல் தொடர்பு’ குறித்த கருப்பொருள் அமர்வை, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை முன்னின்று நடத்தியது. தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர்  திரு அமித் அகர்வால் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், தொழில், கல்வித் துறைகளின் நிபுணர்கள் ஒன்றிணைந்து, வளர்ந்து வரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் குறித்தும், பாதுகாப்பான, நுண்ணறிவு கொண்ட, மீள்திறன் மிக்க டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அவற்றின் பங்கு குறித்தும் கலந்துரையாடினர்.

நிகழ்ச்சியில் பேசிய செயலாளர், இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மலிவான தொலைத்தொடர்பு வலையமைப்புகளில் ஒன்றைக் கொண்டுள்ளது என்றும்,  இங்கு 120 கோடி செல்பேசி இணைப்புகள் உள்ளன, இந்தியாவின் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி சேவைகள் வழங்கப்படுகின்றன என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329732&reg=48&lang=2

***

SK/SV/PS 


(வெளியீட்டு அடையாள எண்: 2329967) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी