சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 6:14PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் விளிம்புநிலை மக்களுக்கான வாழ்வாதார ஆதரவுத் திட்டத்தின் (ஸ்மைல்) மூலம் ஆதரவற்ற பெண் ஒருவர் தற்சார்புடன் வாழும் நிலையப் பெற்றுள்ளார். குடும்பப் பிரிவினை, தீவிர உடல்நலக்குறைவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கோயில் வளாகத்தில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த 46 வயது பெண் மீரா தாக்குர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 2024 மார்ச் 16 அன்று மீட்கப்பட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை, ஊட்டச்சத்துடன் கூடிய உணவுகள் வழங்கப்பட்டதுடன் இரு கண்களிலும் கண்புரை அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. உளவியல் ஆலோசனைகள் மூலம் தன்னம்பிக்கை பெற்ற அவர், தையல் கலை, கைவினைப்பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகளைப் பெற்றார்.
தற்போது மறுவாழ்வு மையத்தின் சமையல் பணிகளை மேற்கொண்டு வருவதுடன், தான் தயாரிக்கும் கைவினைப்பொருட்களைச் சந்தைகளில் விற்பனை செய்து மாதம் சுமார் ரூ.8,000 வருவாய் ஈட்டி வருகிறார். யாசகம் எடுக்கும் நிலையிலிருந்து விடுபட்டு கண்ணியமான வாழ்க்கையைப் பெற்றுள்ள இவரது பயணம், அரசின் விரிவான மறுவாழ்வுத் திட்டங்களின் வெற்றிக்குச் சான்றாகத் திகழ்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329672®=3&lang=1
****
SK/PD/RJ