இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 6:44PM by PIB Chennai
வர்த்தக முத்திரை கொண்ட 543 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் திருத்தியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய விலைப் பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு, திருத்தியமைக்கப்பட்ட விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த திருத்தியமைக்கப்பட்ட புதிய விலைப் பட்டியல் நவம்பர் 9, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.
மத்திய இரசாயன அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துத் துறையின் ஒரு பகுதியான தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் 543 வணிக முத்திரையுடன் கூடிய மருந்துகளுக்குத் திருத்த்தியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 27, 2026 வரை நிறுவனங்கள் சமர்ப்பித்த தகவல்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிக வர்த்தக லாப உச்சவரம்புகளைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் பெறுவதற்கும், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்யவும், பொது நலன் கருதி, அட்டவணையில் சேர்க்கப்படாத 137 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான வர்த்தக லாப உச்சவரம்பு பகுப்பு முறையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அக்டோபர் 17, 2026 அன்று அறிவித்திருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329698®=3&lang=1
***
SK/SV/RJ