நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகம் லிமிடெட் நிறுவனத்தின் நிலங்களுக்கான மின்னணு ஏல அட்டவணையில் தேசிய நிலப் பணமாக்குதல் கழகம் மாற்றம் செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 4:47PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தேசிய நிலப் பணமாக்குதல் கழகம் (என்எல்எம்சி), ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள 'ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகம் லிமிடெட்' நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்கள்மனைகளை மின்னணு ஏலம் விடுவது தொடர்பாக இரு திருத்தங்களை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 26, 2026 தேதியிட்ட திருத்தம்-6 மற்றும் அக்டோபர் 28, 2026 தேதியிட்ட திருத்தம்-7 (Corrigendum-7) ஆகிய இரண்டு திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருத்தம்-6-ன் படி, நீதிமன்ற உத்தரவு காரணமாக, ஏலத்திற்கு விடுவதாக இருந்த 35 மனைகள் ஏலம் தொடர்பான நடைமுறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. எனவே, ஆகஸ்ட் 31, 2026 தேதியிட்ட 'கோரிக்கை ஆவணத்தின்' கீழ் இந்த மனைகள் விற்பனை செய்யப்பட மாட்டாது.

இதனைத் தொடர்ந்து, திருத்தம்-7-ன் வாயிலாக, ஏல நடைமுறைக்கான அட்டவணையை தேசிய நிலப் பணமாக்குதல் கழகம் மாற்றியமைத்துள்ளது. இதன்படி, பதிவு செய்வதற்கும், முன்பணத்தை செலுத்துவதற்கும் நவம்பர் 1, 2026 அன்று இரவு 800 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள மனைகளுக்கான மின்னணு ஏலம், நவம்பர் 3, 2026 அன்று காலை 1100 மணி முதல் மாலை 500 மணி வரை நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329545&reg=3&lang=1

****

SK/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2329774) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी