சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 5:31PM by PIB Chennai
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஷெட்யூல்டு வகுப்பு மாணவன் ஆரவ் படேல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சவால்களைத் தாண்டி வெளிநாட்டில் உயர்கல்வி பயின்று தொழில்முனைவோராக உருவெடுத்துள்ளார். தொழில்நுட்பம் சார்ந்த தொழில் நிறுவனங்களைத் தொடங்கும் லட்சியம் கொண்ட இவருக்கு, சர்வதேச பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கான கூடுதல் செலவு பெரும் தடையாக இருந்தது.
மத்திய அரசின் தேசிய அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டம், அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பைப் பயில இவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கியது. 2023-24 நிதியாண்டில் கல்விக் கட்டணம், விசா கட்டணம், மருத்துவக் காப்பீடு, பயணச் செலவுகள் உள்ளிட்ட தேவைகளுக்காக 89,816 அமெரிக்க டாலர் உதவித்தொகை அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த உயர்கல்வி வாய்ப்பின் மூலம் பெற்ற சர்வதேச அனுபவத்தைக் கொண்டு, தற்போது இவர் ஒரு வணிக நிறுவனத்தின் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார். தகுதியான ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் மத்திய அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு இந்த உதவித்தொகை திட்டம் ஒரு சான்றாகத் திகழ்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329609®=3&lang=1
****
SK/PD/RJ