சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 5:01PM by PIB Chennai
போதைப் பழக்கத்திலிருந்து மீள்வது ஒரு தனிநபரின் உடல்நலம், குடும்ப உறவுகள், பொருளாதார நிலையை மீட்டெடுக்க உதவுகிறது. தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த 25 வயது பட்டதாரி இளைஞர் நீல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), முறையான மறுவாழ்வு சிகிச்சையின் மூலம் மறுவாழ்வு பெற்றிருப்பது பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
நண்பர்களின் தூண்டுதல் காரணமாக மது, போதைப்பொருளுக்கு அடிமையான இவர், குடும்பத்திலும் பணியிடத்திலும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார். இந்நிலையில், கரீம்நகரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் 2026 மே 22 அன்று இவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை, நச்சு நீக்கம், உளவியல் ஆலோசனைகள், நடத்தை சிகிச்சைகள் வழங்கப்பட்டன. குடும்பத்தினரின் ஆதரவு, தொடர் மருத்துவக் கண்காணிப்பு காரணமாக அவர் போதைப் பழக்கத்திலிருந்து முழுமையாக மீண்டார்.
முறையான சிகிச்சை, தொடர் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் போதைப் பழக்கத்திற்கு ஆளானோர், அதிலிருந்து மீண்டு சமூகத்தில் கண்ணியத்துடன் வாழமுடியும் என்பதை இவரது வாழ்க்கைப் பயணம் எடுத்துரைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329565®=3&lang=1
****
SK/PD/RJ