தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 4:53PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் குரல் அழைப்பு மற்றும் இணைய சேவைகளின் தரத்தை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக 2026 செப்டம்பர் 7 முதல் 10 வரை வாகன ஆய்வு சோதனையை நடத்தியது. போபாலில் உள்ள டிராய் மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
உத்தரப் பிரதேச கிழக்கு சேவை மண்டலத்திற்கு உட்பட்ட கோண்டா, பெஹ்ரைச், ஷ்ராவஸ்தி, பல்ராம்பூர் ஆகிய நகரப் பகுதிகளில் 367.7 கிலோமீட்டர் தூரமும், பிரயாக்ராஜ் முதல் கோண்டா வரையிலும், கோண்டா முதல் பெஹ்ரைச் வரையிலும் உள்ள நெடுஞ்சாலைகளில் 256 கிலோமீட்டர் தூரமும் சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் முக்கிய ரயில் நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
நெட்வொர்க் சிக்னல் கிடைக்கும் தன்மை, அழைப்புகள் துண்டிக்கப்படும் விகிதம், குரல் தெளிவு, இணையப் பதிவிறக்கம், பதிவேற்ற வேகம் உள்ளிட்ட முக்கிய சேவைத் தர அளவீடுகள் இதில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த தொலைத்தொடர்பு சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த விரிவான ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329561®=3&lang=1
****
SK/PD/RJ