இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 5:43PM by PIB Chennai
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சமையல் கலை நிறுவனம் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
புதுதில்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் திருமதி சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட், இந்திய சமையல் கலை நிறுவன இயக்குநர் திரு ஞானபூஷன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய சமையல் கலை நிறுவனத்தின் பிபிஏ (சமையல் கலை மற்றும் உணவு வணிகம்), எம்பிஏ (சமையல் மேலாண்மை) ஆகிய பாடத்திட்டங்களை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அங்கீகரிக்கிறது. இதையடுத்து இந்திய சமையல் கலை நிறுவனத்தில் இப்பட்டப் படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்களுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329624®=3&lang=1
****
SK/IR/LDN/RJ