அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான மாநாடு 2026: பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 10:01AM by PIB Chennai

புதுதில்லி பாரத் மண்டபத்தில் வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான மாநாடு 2026-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (2026 அக்டோபர் 27) தொடக்கி வைத்தார். இதில் விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என 5,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் உறுதியான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்க முன்வருமாறு அறிவியல் சமூகம், இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆய்வகங்களைத் தாண்டி, நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு வலு சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றுகையில், நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2014-ல் 400-ஆக இருந்த நிலையில், தற்போது 2.3 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் கே சூட், குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், ஆழ்கடல் இயக்கம் உள்ளிட்ட 12 முக்கியத் துறைகளில் அடிப்படை ஆராய்ச்சிகளையும் தொழில்துறை உற்பத்தியையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இந்த மாநாட்டில், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் பேராசிரியர் ஜோச்சிம் ஃபிராங்க், திரு ரிச்சர்ட் ராபர்ட்ஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட உற்பத்தி முறைகள் குறித்த கருத்தரங்குகளும் நடைபெற்றன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329291&reg=3&lang=1

***

SS/PD/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2329408) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी