புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2026 6:05PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், கேரள அரசின் பொருளாதாரம், புள்ளியியல் துறையுடன் இணைந்து மாநில அளவிலான தொழில் உற்பத்திக் குறியீட்டின் அடிப்படை ஆண்டை மாற்றுவது குறித்த மூன்று நாள் பயிலரங்கை திருவனந்தபுரத்தில் 2026 அக்டோபர் 28 முதல் 30 வரை நடத்துகிறது. நாட்டின் தொழில் துறை வளர்ச்சியைத் துல்லியமாகக் கணக்கிடவும், பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கவும் உதவும் மிக முக்கியமான குறியீடாக இத்தொழில் உற்பத்திக் குறியீடு விளங்குகிறது.
அகில இந்திய அளவிலான தொழில் உற்பத்திக் குறியீட்டின் அடிப்படை ஆண்டை மத்திய அமைச்சகம் 2011-12-லிருந்து 2022-23 ஆக மாற்றியமைத்துள்ளது. தற்போதைய தொழில் துறை உற்பத்தியை முழுமையாகப் பிரதிபலிக்கும் நோக்கில் இந்தப் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எரிவாயு விநியோகம், நீர் விநியோகம், கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு புதிய உற்பத்திப் பிரிவுகள் இதில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 60 மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்கவுள்ளனர். மாநில அளவில் தொழில்துறைப் புள்ளிவிவரங்களின் தரம், நம்பகத்தன்மை, ஒப்பீட்டுத் தன்மையை வலுப்படுத்த இப்பயிலரங்கம் உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2329092®=3&lang=1
****
TV/PD/SH