சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப் பொருளைச் சார்ந்திருப்பதிலிருந்து மீண்டு மறுவாழ்வு பெற்ற ஜம்மு காஷ்மீர் இளைஞர்: மறுவாழ்வு மையத்தின் ஆதரவுடன் வாழ்வில் புதிய தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 4:43PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரின் தெற்கு காஷ்மீர் பகுதியில் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பட்டதாரி இளைஞர் போதைப் பொருளைச் சார்ந்திருப்பதிலிருந்து முறையான சிகிச்சை மூலம் மீண்டு வந்த வெற்றிக் கதை நம்பிக்கையளிப்பதாக உள்ளது. நண்பர்களின் தூண்டுதலால் போதைப்பொருளைச் சார்ந்திருக்கத் தொடங்கிய அவர், பின்னர் ஐந்து ஆண்டுகளாக உடல், மனரீதியான பாதிப்புகளுக்கு உள்ளானார்.

குடும்பத்தினரின் ஆதரவுடன் குல்காமில் உள்ள போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், தொடர் உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. உணர்ச்சி மேலாண்மை, சரியான முடிவெடுத்தல், தன்னம்பிக்கையை மீட்டெடுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்திய மருத்துவக் குழுவினர், அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவினர். மருத்துவக் குழுவின் தீவிர முயற்சி, குடும்பத்தினரின் தொடர் ஆதரவு காரணமாக அந்த இளைஞர் போதை பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளார்.

சரியான நேரத்தில் அளிக்கப்படும் மருத்துவ உதவி, குடும்பத்தின் ஆதரவு போதைப் பொருளைச் சார்ந்திருப்பதிலிருந்து மீண்டு வர உதவும் என்பதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328980&reg=3&lang=1

***

SS/PD/SH   


(வெளியீட்டு அடையாள எண்: 2329188) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी