சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2026 5:18PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் 15 நாட்கள் நடைபெறும் சில்ப் சமாகம் கைவினைப்பொருட்கள் கண்காட்சி 2026, புதுதில்லியில் உள்ள தில்லி ஹாட் மைதானத்தில் 2026 நவம்பர் 1 முதல் 15 வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் பாரம்பரிய கைவினைப்பொருட்கள், பண்டிகைக் கால விளக்குகள், கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நோக்கில் கலை நயமிக்க பொருட்களின் நேரடிக் கண்காட்சி, கலாச்சார நிகழ்ச்சிகளுடன் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
பாரம்பரிய கைவினைக்கலைஞர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், அவர்களது தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தவும் இக்கண்காட்சி வாய்ப்பளிக்கிறது. 2022 முதல் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட கைவினைக்கலைஞர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். நடப்பாண்டில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை இணைந்து முதல் முறையாக பாரத் டுலிப், பர்பிள் திருவிழா ஆகியவற்றின் கீழ் சுமார் 150 அரங்குகளை அமைக்கின்றன.
பாரம்பரிய கைவினைக்கலைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஆடை வகைகள், பாரம்பரிய உணவு வகைகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் ஏழு சிறப்பு வளாகங்களாக இக்கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. கைவினைக்கலைஞர்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யவும், பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்கவும் அமைச்சகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329019®=3&lang=1
****
TV/PD/SH