தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0: மத்திய தொலைத்தொடர்புத் துறையின் தூய்மை நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 4:04PM by PIB Chennai

மத்திய தொலைத்தொடர்புத் துறை அதன் பொதுத்துறை நிறுவனங்கள், துணை அமைப்புகளுடன் இணைந்து தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ், பொதுக் குறைதீர்ப்பு, வருவாய் ஈட்டுதல், அலுவலக இட மேலாண்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளை எட்டியுள்ளது. 2026 அக்டோபர் 26 அன்று நாடு முழுவதும் உள்ள 520 இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன.

பொதுமக்கள் குறைதீர்ப்பு பிரிவில் பெறப்பட்ட 2,270 மனுக்களுக்கு முழுமையாகத் தீர்வு காணப்பட்டுள்ளதுடன், நிலுவையில் இருந்த 640 மேல்முறையீட்டு மனுக்களும் முடித்து வைக்கப்பட்டுள்ளன. 45,000 சதுர அடி இலக்கைத் தாண்டி, 80,724 சதுர அடி பரப்பளவிலான அலுவலக வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.

பழைய தேவையற்ற பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.2.08 கோடி, மின்னணுக் கழிவுகளை அகற்றியதன் மூலம் ரூ.2.18 கோடி என அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. அலுவலகத்தை சிறந்த முறையில் பராமரிக்கவும், நிர்வாகத் திறனை மேம்படுத்தவும் தொலைத்தொடர்புத் துறை தொடர்ந்து உறுதியுடன் செயலாற்றி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328964&reg=3&lang=1

***

SS/PD/SH   


(வெளியீட்டு அடையாள எண்: 2329154) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali