ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ், மத்திய பட்டு வாரியத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள்: மத்திய ஜவுளி அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 4:10PM by PIB Chennai

அரசு அலுவலகங்கள் முழுவதும் தூய்மைப் பராமரிப்பை மேம்படுத்துதல், பணியிடத் திறனை அதிகரித்தல், நிலுவைப் பணிகளைக் குறைத்தல்,  பதிவுகள், வளங்களின் திறன் வாய்ந்த நிர்வாகத்தை உறுதி செய்தல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படும் சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ், மத்திய பட்டு வாரியத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளையும், முயற்சிகளையும், மத்திய ஜவுளி அமைச்சகம் எடுத்துக் காட்டுகிறது.

தூய்மை, முறையான பதிவு மேலாண்மை, காலாவதியான பொருட்களை அகற்றுதல், அலுவலக இடத்தை உகந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு செயல்பாடுகளையும், முயற்சிகளையும் மேற்கொள்வதன் மூலம் மத்திய பட்டு வாரியம் இந்த இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளது. இந்த முயற்சிகள், தூய்மையான, ஒழுங்கமைக்கப்பட்ட, திறன் வாய்ந்த பணிச்சூழலை மேம்படுத்துவதில் வாரியத்தின் அர்ப்பணிப்பு உணர்வைப்  பிரதிபலிப்பதாக உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328968&reg=3&lang=1   

***

(Release ID: 2328968)

SS/SV/SH

 

(வெளியீட்டு அடையாள எண்: 2329139) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी