இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2026 10:26AM by PIB Chennai
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ், நொய்டாவில் இயங்கி வரும் தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம், தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ், பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடியிருப்புப் பகுதிகள், பொது இடங்கள், அலுவலக வளாகங்களில் குவிந்து கிடந்த கழிவுகள் அகற்றப்பட்டு, கழிவுநீர்க் கால்வாய்கள், குடிநீர்த் தொட்டிகள் முறையாகச் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. தேவையற்ற பழைய பொருட்கள் அகற்றப்பட்டு, அலுவலக இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல், கட்டுரைப் போட்டி, சுவரோவியங்கள் வரைதல் வாயிலாகத் தூய்மை குறித்த விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது. நொய்டா செக்டார் 2 பகுதியில் உள்ள கோயில் வளாகத்திலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தூய்மைப் பணியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுடன் இணைந்து கழகத்தின் அலுவலர்களும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். அலுவலக வளாகங்களில் தூய்மையைக் கடைபிடித்து, நிலையான பணிச்சூழலை உருவாக்க அமைச்சகம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328806®=3&lang=1
***
SS/PD/SU