இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 1:33PM by PIB Chennai
மத்திய பாதுகாப்புத் துறை சார்பில், “சக்ரா- எதிர்கால போருக்காக தற்போதுள்ள ராணுவ தளங்களை உருமாற்றுதல்” என்ற தலைப்பில், 2026 டிசம்பர் மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் சந்திமந்திர் ராணுவ மையத்தில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம், புதுதில்லியில், 2026 அக்டோபர் 26-ம் தேதி நடைபெற்றது. இதை மேற்கு கட்டளை தளத்தின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் புஷ்பேந்திர சிங் தொடங்கி வைத்தார். இதில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கருத்தரங்கு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
ராணுவத்தில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை கையாளுவது, எதிர்கால போர் முறை, போர் திறனை மேம்படுத்துவது, தகவமைப்பு, தற்சார்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கருத்தரங்கிற்கு முன்னோட்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில், ராணுவத்தில் நவீனமயமாக்கல், சமூக- ராணுவ ஒத்துழைப்பு, ராணுவத்தை பலப்படுத்துவதில் தற்சார்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.
ராணுவ பயனாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன், ராணுவத் தளங்களை மேம்படுத்தி அடுத்தகட்டத் திற்கு கொண்டு செல்லும் வகையில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். குறிப்பாக, எதிர்கால போருக்காக தற்போதுள்ள ராணுவ தளங்களை உருமாற்றுதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328386®=3&lang=1
***
SS/LN/SH