இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 3:32PM by PIB Chennai
மத்திய எஃகு அமைச்சகம், தேசிய எஃகு கொள்கை- தொலைநோக்கு 2047 வரைவை தயாரித்துள்ளது. அதன்படி, 2047-ம் ஆண்டுக்குள் கச்சா எஃகு உற்பத்தி திறனை 604 மெட்ரிக் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. 302 கிலோ தனிநபர் நுகர்வு பயன்பாடு, 45 டன் எஃகு ஏற்றுமதி ஆகியவற்றை செயல்படுத்த மத்திய எஃகு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கச்சா எஃகுக்கான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்ற அடர்த்தியை வெகுவாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எஃக்கு உற்பத்தி திறனை மேம்படுத்தவும், இத்துறையில் பெண்களை பங்கேற்க செய்யும் பொருட்டு எஃகு உற்பத்தி நிறுவங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அக்டோபர் 14 முதல் 16-ம் தேதி வரை நடைபெற்ற எரிசக்தி வார விழாவில், இந்திய எஃகு அமைச்சக அதிகாரிகள் பங்கேற்று, எஃகு உற்பத்தியை மேம்படுத்த இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினர். சுரங்க நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327351®=3&lang=1
***
SK/LN/RJ