சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2026 8:20PM by PIB Chennai
அசாம் மாநிலம் குவஹாத்தியில் கடந்த 21-ம் தேதி முதல் நடைபெற்றுவரும் 'ஷில்ப் சமகம் மேளா 2026', சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் நடப்பு நிதியாண்டில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சித் தொடர்களில் இரண்டாவது நிகழ்வாகும்.
வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள கைவினைக் கலைஞர்களை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தக் கண்காட்சி இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கைத்தறித் தயாரிப்புகளின் வளமான, பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. இதில் 31 பெண் கைவினைக் கலைஞர்கள் உட்பட மொத்தம் 75 பேர் பங்கேற்றுள்ளனர்.
ஷில்ப் சமகம் மேளா என்பது, அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பட்டியலின மக்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், தேசிய துப்புரவுப் பணியாளர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றில் இணைந்துள்ள கைவினைக் கலைஞர்கள், பயனாளிகளுக்குச் சந்தைப்படுத்தல் ஆதரவை வழங்குவதற்காக, முன்னெடுக்கப்பட்ட ஒரு முக்கிய முயற்சியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328079®=48&lang=2
***
AD/RB/RJ