வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2026 7:39PM by PIB Chennai
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், மாநில அரசுடன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் இந்திய நகர்ப்புற போக்குவரத்துக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 19-வது நகர்ப்புறப் போக்குவரத்து இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சி நிறைவடைந்தது. நிறைவு விழாவில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், மின்சாரத்துறை அமைச்சர் திரு மனோகர் லால் கலந்துகொண்டு உரையாற்றினார். நகர்ப்புறப் போக்குவரத்துத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கும், சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றியவர்களுக்கும் அமைச்சர் விருதுகளை வழங்கினார்.
நகர்ப்புற போக்குவரத்து என்பது நகர்ப்புறத் திட்டமிடலுடன் ஆரம்பத்திலிருந்தே ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று திரு மனோகர் லால் வலியுறுத்தினார். மேம்பட்ட போக்குவரத்து உள்கட்டமைப்பு என்பது வெறும் வளர்ச்சியின் பலன் மட்டுமல்ல, அது பொருளாதார வளர்ச்சிக்கும் நகர்ப்புற மேம்பாட்டிற்கும் ஒரு அடித்தளமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவின் எதிர்கால நகர்ப்புற போக்குவரத்து அமைப்புமுறைகள் ஒருங்கிணைப்பு, உள்ளடக்கிய தன்மை, அறிவுசார் திறன் ஆகிய மூன்று கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328059®=48&lang=2
***
SK/RB/RJ