தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த மாநில அளவிலான இரண்டு நாள் தொழிலாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 24 OCT 2026 1:59PM by PIB Chennai

தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த மாநில அளவிலான திறன் மேம்பாடு, விழிப்புணர்வு நிகழ்ச்சியை, அக்டோபர் 26, 27 ஆகிய தேதிகளில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், உத்தரப் பிரதேச மாநில அரசுடன் இணைந்து நடத்துகிறது.

தொழிலாளர் சீர்திருத்தங்கள் குறித்து மாவட்ட அளவில் திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், நாடு தழுவிய அளவில் முன்னெடுக்கப்படும் தொழிலாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 28, 2026 அன்று நாடு முழுவதும் தொடங்கப்பட்ட ‘தொழிலாளர் கலந்துரையாடல்’ பிரச்சாரம், 90 நாட்கள் நீடிக்கும் ஒரு மக்கள் தொடர்பு முன்னெடுப்பாகும். இதன் மூலம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 316 மாவட்டங்களில், குறிப்பாக தொழில்துறை பகுதிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, மாவட்ட அளவில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறது. புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் உள்ள விதிகள், அவற்றின் பயன்பாடு,  கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த தெளிவான புரிதலை வழங்குவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும். இதன் மூலம், புதிய சட்டங்களை அடிப்படை அளவில் திறம்படச் செயல்படுத்த வழிவகை செய்யப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327906&reg=3   

***

AD/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327968) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati