பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹானிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 11:00PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் எஃப்37 வட்டு எறிதல் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற ஹானிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அவரது சாதனை இந்திய பாரா தடகளத்திற்கு ஒரு பெருமைக்குரிய விஷயம் என்று கூறியுள்ள திரு நரேந்திர மோடி, அவர் தொடர்ந்து வெற்றி பெற்று நாட்டிற்கு மேலும் பல பெருமைகளைத் தேடித் தருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

 

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் எஃப்37 வட்டு எறிதல் பிரிவில் சிறந்த எறிதலுடன் வெண்கலம் வென்ற ஹானிக்கு வாழ்த்துகள். அவரது இந்தச் சாதனை இந்திய பாரா தடகளத்திற்கு ஒரு பெருமைக்குரிய விஷயம். அவர் தொடர்ந்து ஜொலித்து, நாட்டிற்கு மேலும் பல பெருமைகளைக் கொண்டு வரட்டும்: பிரதமர் நரேந்திரமோடி"

 

(Release ID : 2327069)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2327593) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Gujarati , Telugu , Kannada , Malayalam