பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நிரஞ்சன் முகுந்தனுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 9:11PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026 ஆடவர் 200 மீட்டர் தனிநபர் மெட்லி எஸ்எம் 7 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நிரஞ்சன் முகுந்தனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அவருடைய திறனையும், பொறுமையையும் சிறப்பாக வெளிப்படுத்தியதற்காக நிரஞ்சன் முகுந்தனுக்கு பாராட்டு தெரிவித்துள்ள திரு மோடி, இந்தச் சவால்மிக்கப் போட்டியில் அவர் வெற்றிப் பெற்றது மிகவும் பாராட்டத்தக்கது என்றும் தொடர்ந்து அவர் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் கூறினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:

"திறன் மற்றும் பொறுமையின் சிறப்பான வெளிப்பாடு!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026 ஆடவர் 200 மீட்டர் தனிநபர் மெட்லி எஸ்எம் 7 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நிரஞ்சன் முகுந்தனுக்கு வாழ்த்துகள்.  இந்தச் சவால்மிக்கப் போட்டியில் அவர் வெற்றிப் பெற்றது மிகவும் பாராட்டத்தக்கது. அவர் தொடர்ந்து வெற்றிப் பெற வாழ்த்துகள்"

***

(Release ID: 2325596)

SS/IR/SU/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326099) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam