சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2026 8:09PM by PIB Chennai
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பல்வேறு பிரிவுகள், அமைவனங்கள், கழகங்கள், நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமையில், தில்லியில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் குமார், அமைச்சகத்தின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல், கண்காணித்தல், சம்பந்தப்பட்ட தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவற்றில் ஒரு முழுமையான, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கையாள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஒவ்வொரு முன்முயற்சியும் தெளிவான கவனத்துடன் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
சமூக அதிகாரமளித்தலுக்கு ஒட்டுமொத்த அரசும், சமூகமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். நலத்திட்டங்களைச் சுமூகமாகவும், தடையின்றியும், திறம்படவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக நலத் துறைகள், தொடர்புடைய பங்குதாரர்களுடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325268®=3&lang=1
***
AD/BR/SH