சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னையிலிருந்து நியூசிலாந்திற்கு ரத்தினங்கள், ஆபரணங்கள் அடங்கிய சரக்குத் தொகுப்பு அனுப்பிவைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2026 1:22PM by PIB Chennai

வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரகத்தின் சென்னை அலுவலகம், நியூசிலாந்திற்கு ரத்தினங்கள், ஆபரணங்கள் அடங்கிய சரக்குத் தொகுப்பு ஒன்றை அனுப்பி வைத்தது.
அக்டோபர் 20, 2026 அன்று நடைமுறைக்கு வரவுள்ள இந்திய-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், முதல் சரக்குத் தொகுப்பை இயக்குனரகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திருமதி ராஜலட்சுமி தேவராஜ் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
ரூ. 63,78,753 மதிப்பிலான ரத்தினங்களும், ஆபரணங்களும், எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானவை ஆகும்.

இந்த நிகழ்வில் ரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்தத் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் உருவாகியுள்ள வாய்ப்புகள் குறித்தும், ரத்தினம் மற்றும் ஆபரணத் துறைக்கு இது வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்தும் எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் திரு டயான் சக்தி சீனிவாசன் பேசினார்.
****
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2325105)
வருகையாளர் எண்ணிக்கை : 21