புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திறன், இணைப்பு மற்றும் சரக்குப் போக்குவரத்தில் இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறைகள் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2026 4:00PM by PIB Chennai

தரநிலை சார்ந்த குறியீடுகளின் தொகுப்பின் மூலம் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் செயல்திறன் குறித்த தகவல்பலகையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

முக்கியத்துவம் வாய்ந்த  உள்கட்டமைப்புத் துணைத் துறைகளின் செயல்திறன் குறித்த ஒரு விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதற்காக, உள்கட்டமைப்பு கண்காணிப்பு மற்றும் சான்றுகள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தகவல்பலகை  2026 ஏப்ரல் 16 அன்று தொடங்கப்பட்டது.

காலாண்டிற்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் தரவுகள் அந்தந்த அமைச்சகங்கள்/துறைகள்/தொடர்புடைய அதிகாரப்பூர்வ அறிக்கைகள் அல்லது வெளியீடுகளிலிருந்து பெறப்பட்ட அண்மைக்காலத் தரவுகளை உள்ளடக்கியுள்ளது. இது அதிகாரப்பூர்வ உள்கட்டமைப்பு செயல்திறன் புள்ளிவிவரங்களை உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்கிறது.

செயல்திறன் கண்காணிப்பு தகவல்பலகை தற்போது 184 குறியீடுகளுடன்  விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 21 புதிய குறியீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது உள்கட்டமைப்பு செயல்திறன் கண்காணிப்பின் முழுமைத்  தன்மையை கணிசமாக மேம்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324355&reg=3&lang=1   

***

TV/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2324923) வருகையாளர் எண்ணிக்கை : 62
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी