சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சித்தோர்கர்–உதய்பூர் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் தொடர்பான, நடுவர் மன்ற வழக்கில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெற்றிகரமாக வாதாடி அரசு நிதியைப் பாதுகாத்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 5:21PM by PIB Chennai
ராஜஸ்தானில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-76-ன் 93.5 கிலோ மீட்டர் நீளமுள்ள சித்தோர்கர்-உதய்பூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணியில், உச்சித் எக்ஸ்பிரஸ்வே பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு எதிரான ஒரு நடுவர் மன்ற வழக்கில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது ஒப்பந்த நிலைப்பாட்டை வெற்றிகரமாகப் பாதுகாத்துள்ளது. நடுவர் மன்றம், ஆணையத்தின் நிலைப்பாட்டைப் உறுதிசெய்ததன் மூலம், பொது நதியைப் பாதுகாத்து, தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நிர்வகிக்கும் ஒப்பந்தக் கட்டமைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் மன்றம், திட்டத்திற்கான ஒப்பந்த கோரிக்கைகளை ஆய்வு செய்தது. ஒப்பந்த நிறுவன கோரிக்கையான ரூ. 366.53 கோடியை நடுவர் மன்றம் நிராகரித்தது.
சமீபத்திய குறிப்பிடத்தக்க சட்ட வெற்றிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பெற்றுள்ளது.
நடுவர் மன்ற வழக்குகளின் வெற்றிகரமான தீர்வு, சிறந்த ஒப்பந்த மேலாண்மை, செயல்திறன் மிக்க சட்ட உத்தி ஆகியவற்றில் ஆணையம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324416®=3&lang=1
*******
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324919)
வருகையாளர் எண்ணிக்கை : 11