இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் இல்லாத, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் - மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

இடுகை இடப்பட்ட நாள்: 17 OCT 2026 5:48PM by PIB Chennai

மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, தேசத்தைக் கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். குஜராத்தின் போர்பந்தர் மாவட்டத்தில் உள்ள குட்டியானாவில் இன்று (17 அக்டோபர் 2026) நடைபெற்ற வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளையோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,  வளர்ச்சியடைந்த, போதைப்பொருள் இல்லாத இந்தியாவைக் கட்டமைப்பதில் இளைஞர்களின் பொறுப்புகள், கூட்டு நடவடிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

 

2047-ல் இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டு விழாவை நோக்கிய அமிர்த காலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டாக்டர் மாண்டவியா, வளர்ச்சியடைந்த, தற்சார்பு இந்தியாவை நனவாக்க மக்களின் கூட்டு அர்ப்பணிப்பு அவசியம் என்று கூறினார். செங்கோட்டையிலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்த ஐந்து உறுதிமொழிகளை குறிப்பிட்ட அமைச்சர், அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324699&reg=3&lang=1

(Release ID : 2324699)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324740) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati