சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ராமநாதபுரத்தில் அதிநவீன வசதிகளைக் கொண்ட ஆதார் சேவை மையம் திறப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 9:28PM by PIB Chennai
இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ராமநாதபுரத்தில் புதிய, அதிநவீன வசதிகளைக் கொண்ட 'ஆதார் சேவை மையத்தை' இன்று ( அக்டோபர் 16, 2026) செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களை மையமாகக் கொண்ட ஆதார் சேவைகளை வலுப்படுத்துவதற்கான மற்றொரு முக்கிய நடவடிக்கையாகும்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம். சிவகுரு பிரபாகரன், இந்த ஆதார் சேவை மையத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரிகள், ஆதார் சேவை மைய ஊழியர்கள், பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தனித்துவ அடையாள ஆணையத்தின் இந்த முயற்சியைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர், அங்கு வருகை தந்திருந்த பொதுமக்களிடமும், பணியாளர்களிடமும் கலந்துரையாடினார். மேலும், ஆதார் பதிவு, விவரங்களைப் புதுப்பிக்கும் நடைமுறைகள் ஆகியவை குறித்துக் கேட்டறிந்த அவர், இந்த மையத்தில் வழங்கப்படும் பல்வேறு ஆதார் சேவைகளையும் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் ஆதார் சேவை மையத்தில், ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தடையற்ற ஆதார் சேவைகளை வழங்க 4 செயல்பாட்டுக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது விடுமுறை நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இந்த மையம் செயல்படும் என்பதால், பொதுமக்கள் எளிதாகச் சென்று சேவைகளைப் பெற முடியும். இந்த மையத்தில் ஆதார் பதிவு, பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பித்தல், குறைகளைத் தீர்த்தல் உள்ளிட்ட அனைத்து ஆதார் தொடர்பான சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன.
ராமநாதபுரத்தில் இந்த ஆதார் சேவை மையத்தைத் தொடங்கியதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் தற்போது மொத்தம் 24 ஆதார் சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் 6 மையங்கள் விரைவில் பல்வேறு மாவட்டங்களில் திறக்கப்பட உள்ளன.
தனித்துவ அடையாள ஆணையத்தின் முன்பதிவு இணையதளமான https://bookappointment.uidai.gov.in/ மூலம், ஆதார் சேவை மையங்களில் சேவைகளைப் பெறுவதற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324600)
வருகையாளர் எண்ணிக்கை : 28