அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தமிழ்நாட்டில் செவ்வாய் கிரகத்துக்கு நிகரான புவியியல் பகுதிகளை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 3:39PM by PIB Chennai
தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், சிலியின் அட்டகாமா பாலைவனத்திலும் இரண்டு முக்கிய கனிம வகைகள் கண்டறியப்பட்டன. செவ்வாய் கிரகத்துடன் புவியியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ரீதியான ஒற்றுமைகளைப் பிரதிபலிப்பதால், அப்பகுதிகள் செவ்வாய் கிரகத்திற்கு நிகரான புவியியல் பகுதிகளாக இருக்கலாம் என்பதை நிரூபிக்க இவை உதவியுள்ளன.
கிரகங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தக் காலகட்டத்தில், புவிசார் ஒற்றுமை கொண்டத் தளங்களைக் கண்டறிவது ஒரு முக்கியமாக மாறியுள்ளது. சுற்றுப்பாதை சார்ந்த தரவுகளால் மட்டும் செவ்வாய் கிரகத்தில் உள்ள கனிமங்களை முழுமையாக வகைப்படுத்த முடியாது என்பதை அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இந்த ஆய்வுகளுக்கு துல்லியம் வாய்ந்த, அதிநவீன பகுப்பாய்வுக் கருவிகள் அவசியமாகிறது.
கேரளப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் உள்ள அறிவியல் தொழில்நுட்பத் துறை - அறிவியல் தொழிலுட்ப மேம்பாட்டு நிதியத்தின் உதவியுடன் செயல்படும் லேசர் ராமன் நிறமாலைமானி உள்ளிட்ட மேம்பட்ட கருவிகள், தமிழ்நாட்டின் நெய்வேலியில் மெலன்டரைட்டையும், சிலியின் அட்டகாமா பாலைவனம் மற்றும் தமிழ்நாட்டின் பாதியளவு வறண்ட புவியியல் மற்றும் பழங்கால பருவநிலைப் பகுதியான திருச்சிராப்பள்ளி அருகே உள்ள தரிசு நிலங்களில் ஜிப்சத்தையும் கண்டறிய உதவியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324335®=3&lang=1
***
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324510)
வருகையாளர் எண்ணிக்கை : 19