அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பருவநிலை வரலாறு மூலம் பருவமழை குறித்த ஏற்றதாழ்வுகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகள்

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2026 3:42PM by PIB Chennai

மத்திய கங்கைச் சமவெளிப்பகுதியில், கோடைகாலப் பருவமழையின் ஏற்றத்தாழ்வுகள், பல ஆண்டுகளாக ஏரி நீரியல், வண்டல் நுண்ணுயிரிகளின் செயல்பாடு மற்றும் தொடக்ககால விவசாய நடைமுறைகளை போன்றவற்றைக் கட்டுப்படுத்தியுள்ளன என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  

பருவநிலை மற்றும் விவசாய நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கும், நீர் பாதுகாப்பு, ஈரநிலப் பாதுகாப்பிற்கு வழிகாட்டவும், பேரிடர் அபாயக் குறைப்பை மேம்படுத்தவும், மனித-பருவநிலை குறித்த புரிதலை வளர்க்கவும் இந்த ஆய்வுகள் உதவக்கூடும்.

இந்தியத் துணைக்கண்டத்தில் மனித சமூகங்களின் பரிணாம வளர்ச்சியில், கடந்த காலத்தின் தீவிர பருவநிலை நிகழ்வுகள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்ற நீண்டகாலக் கேள்விக்கு, விஞ்ஞானிகள் விடை காண முயன்று வருகின்றனர். சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும், இந்திய கோடைகாலப் பருவமழையின் மாற்றங்களுடன் பரவலாக இணைக்கப்பட்டுள்ளன. எனினும், மத்திய கங்கைச் சமவெளிப் பகுதியில் உள்ள பிற்கால சமூகங்கள் இதேபோன்ற பருவநிலை ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்ட விதம் எவ்வாறு பலனளித்தன என்பது குறித்த தரவுகள் மிகக் குறைவாகவே உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324336&reg=3&lang=1&  =1   

***

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324502) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी